ஸ்தல வரலாறு

கோயிலின் வரலாறு: 

சப்த கரைகண்டேஸ்வரரில் ஒன்றான காஞ்சி கரைகண்டேஸ்வரர்:



      வாழப்பந்தல் கிராமத்தில் அம்பாள் தவத்தில் இருந்தபொழுது ஒரு மாலைப்பொழுதில் முருகப்பெருமானை தண்ணீர் எடுத்துவரப் பணித்தாள். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை செங்கம் முதல் போளூர் வரை படர்ந்து இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் செலுத்தினார். அங்கு தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் வேலாயுதத்தின் பெருமையால் மோக்ஷம் அடைந்து விட்டார்கள். ஆகவே மலையிலிருந்து தண்ணீர் குருதி ஆறாக பெருக ஆரம்பித்துவிட்டது.

       
கறைகண்டீசுவரர் திருக்கோயில் காஞ்சி

   இந்த ஆறு உமாதேவியின் விருப்பத்திற்கு ஏற்ப பரிசுத்தமான தண்ணீராக மாறிவிட்டது. இதனால் இந்த ஆறு முருகன் பெயரால் சேயாறு எனவும் குருதி பெருக்கால் செவ்வாறு எனவும் இப்பொழுது செய்யாறு எனவும் வழங்கப்படுகிறது.
            செய்யாறுக்கு கிழக்கே இருக்கும் கோயில்களில் உள்ள சுவாமிக்கு கைலாசநாதர் என்றும் மேற்க்கே உள்ள கோயில்களின் சுவாமிக்கு கரைகண்டேஸ்வரர் என்ற பெயரும் உள்ளது.முருகப்பெருமான் இந்த சப்த கரைகண்டேஸ்வரர்களை வணங்கி பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டார்.


No comments:

Post a Comment