உற்சவம்

பங்குனி உத்திரப் பெருவிழா:

பங்குனி உத்திரப் பெருவிழாவானது பங்குனி மாதம் கிருத்திகையுடன் கூடிய பஞ்சமி திதியில் கொடியேற்றி, அன்று முதல் பத்து நாட்களுக்கு நடைபெறும். பத்தாவது நாளான உத்திரத்தன்று விழா முடிவடையும் அன்று கொடி இறக்கப்படும். சிவனுக்கும் பார்வதிக்கும் மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். "சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்".

இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது.

பங்குனி உத்திரப் பெருவிழா விவரம்

ஸ்ரீ வினாயகர் உற்சவம் இரவு மூஷிக வாகனத்தில் ஸ்ரீ விநாயகர் வீதியுலா காட்சி.
முதல் நாள் திருவிழா  காலை காலையில் கொடியேற்றம் பஞ்சமூர்த்திகள் விமானங்களில் மாட வீதியுலா காட்சி தருதல்.
இரவு சுவாமி-அம்மன் அதிகாரநந்தியில்  மாட வீதியுலா காட்சி தருதல்.
இரண்டாம் நாள் திருவிழா காலை விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியுலா வரும் காட்சி.
இரவு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சந்திரசேகரர்  இந்திர விமானங்களில் மாடவீதியுலா காட்சி.
மூன்றாம் நாள் திருவிழா காலை விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியுலா வரும் காட்சி.
இரவு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சந்திரசேகரர் மாவடிச் சேற்வை.
நான்காம் நாள் திருவிழா காலை விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியுலா வரும் காட்சி.
இரவு பஞ்சமூர்த்திகள் நாகவாகனத்திலும் மாட வீதியுலா வரும் காட்சி.
ஐந்தாம் நாள் திருவிழா காலை விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியுலா வரும் காட்சி.
இரவு பஞ்சமூர்த்திகள் மூஷிகர்,மயில், பெரிய ரிஷப வாகனங்களில் தனித்தனியே மாட வீதி உலா வரும் காட்சி.
ஆறாம் நாள் திருவிழா காலை விநாயகர், சந்திரசேகரர் மாட வீதியுலா வரும் காட்சி.
இரவு விநாயகர், சந்திரசேகரர் யானை வாகனத்திலும் மாடவீதியுலா வரும் காட்சி.
ஏழாம் நாள் திருவிழா காலை  திருதேர் திருவிழா பஞ்சமூர்த்திகள் திருதேறேறி பவனி  வரும் காட்சி.
இரவு
எட்டாம் நாள் திருவிழா காலை விநாயகர், சந்திரசேகரர், நால்வர் மாட வீதியுலா வரும் காட்சி.
இரவு பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில்  மாட வீதியுலா வரும் காட்சி.
ஒன்பதாம் நாள் திருவிழா காலை சிவகாமி நடராஜர்- விநாயகர், சந்திரசேகரர் மாடவீதியுலா வரும் காட்சி.
இரவு  மாலை 4.00 மணிக்கு  பிச்சாண்டவர் பவனி, இரவு விநாயகர், சந்திரசேகரர்  கைலாச வாகனங்களில் வீதியுலா வரும் காட்சி.
பத்தாம் நாள் திருவிழா காலை விநாயகர், சந்திரசேகரர் மாட வீதியுலா வரும் காட்சி (தீர்த்தவாரி உற்சவம்).
இரவு இரவு 8.00 மணிக்கு  அம்மன் தவக்கோலத்தில் செட்டிதெரு வினாயகர் கோவிலுக்கு   எழுந்தருளி  சீர்வரிசை பெற்றுவருதல்.   இரவு 10 மணிக்கு விடைமீதமர்ந்து மாலை மாற்றல் திருமணமண்டபத்தில்  திருமணம் செய்தல்.
பங்குனி உத்திரப் பெருவிழா காலை அதிகாலை திருக்கல்யான காட்சி, திருமாணகோலத்தில்  பஞ்சமூர்த்திகள் மூஷிகர்,மயில், பெரிய ரிஷப வாகனங்களில் தனித்தனியே மாட வீதி உலா வரும் காட்சி.
இரவு சுவாமி-அம்மன் கந்தபொடி உற்சவம்.

No comments:

Post a Comment