திருவூடல் விழா

திருவூடல் திருவிழா சிறப்புக்குரியது. சிவனுக்கும்,பார்வதிதேவிக்கும் இடையே ஏற்பட்ட ஊடலையும், கூடலையும் விவரிக்கும் பெருவிழாவாக ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
   அன்று அதிகாலையில் கறைகண்டீசுவரர்ரும், பெரியநாயகியம்மனும் மாட வீதியில் வலம் வருவார்கள். மதியம் 2 மணிக்கு திருவூடல் வீதி எழுந்தருள்வார்கள். அப்போது அம்மை கோபித்துக் கொண்டு செல்வார். இப்படி முன்னும், பின்னும் மூன்று முறை சென்று, பின் வேகமாக ஆலயம் சென்று கருவறையில் நுழைந்து தாளிட்டுக் கொள்வாள் அம்பிகை. பின்னர் சுந்தரர் தூது சென்று அம்மையை சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைப்பார். இது நடக்கும்போது இரவு 11 மணியாகிவிடும். அதன்பிறகு தீபாராதனை செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் தருவார்கள். இவ்விழாவை தரிசிப்பது தம்பதியரிடையே அந்யோன்யம் அதிகரிக்கச் செய்யும் என்பர்.

1 comment: